(
அப்துல் அஸீஸ்)
அல்ஹம்துலில்லாஹ்
எனது 24 வருட தூதராக வாழ்வில் தூதுவராக நான்கு வருடங்கள் எங்களோடு தொடர்ந்து கொண்டிருக்கின்ற தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
அதற்கு பல காரணங்கள் உண்டு.
இலங்கை நாட்டை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டு இலங்கை நாட்டு மக்களின் மனோநிலையை அறிந்து கொண்டு மிகவும் விசாலமான உள்ளத்தோடு தனது பணிகளை முன்னெடுத்து வருவதை நேரில் கண்டு அனுபவித்து இந்த கருத்துக்களை சொல்ல முனைகின்றேன்.
பலர் தூரத்திலிருந்து இவரை பார்க்கிறார்கள் சிலர் விமர்சனக் கண்ணோட்டத்தோடு இவரை நோக்குகிறார்கள். இவர்களுக்கு உண்மை தெரியாது.
இவர்களோடு நெருங்கி பழகுகின்ற சிலர் பழகி ஏதாவது சாதித்துக் கொள்ளலாம் என்று சுயநலத்தோடு கருத்துக்கள் சொல்லி வருகிறார்கள்.
பொதுநல கண்ணோடு சுயநலம் மறந்து ஒரு மனிதனை எப்படி பார்க்க வேண்டும்?
நான் தூதரகத்தில் வேலை செய்தாலும் தூதுவரோடு எனக்கு அறவே தொடர்புகள் இல்லாவிட்டாலும் அருகாமையில் இருந்து கொண்டு இவரை நான் அவதானித்து வந்தேன்.
இஸ்லாம் குறித்தும் மனிதாபிமானம் குறித்தும் இவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார்?
இஸ்லாம் குறித்தும் மனித சமூகம் குறித்தும் விசாலமான கருத்து கொண்ட ஒருவர்.
என்னைப் படைத்துப் பரிபாலிக்கின்ற அல்லாஹ் எல்லோருக்கும் சொந்தமானவன் என்ற கருத்தை அடிக்கடி எனக்கு சொல்வார்.
ரப்புல் ஆலமீனை ஏன் இந்த சமூகம் ரப்புல் முஸ்லீனாக மாற்றுகிறது?
மனித சமூகம் வாழ வேண்டும் மனித சமூகத்தை சிறப்பாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் எம்மை இந்த உலகத்துக்கு அனுப்பி உள்ளான்.
முஸ்லிம் சமூகம் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காக எம்மை அனுப்பவில்லையே!
முஸ்லிம் சமூகத்தின் நலன் காக்கும் மனிதர்களாக நாங்கள் இல்லை மனித சமூகத்தின் நலன் காக்கும் சிறந்த மனிதர்களாக உலகத்துக்கு அனுப்பப்பட்டோம் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்துவார்.
மனித படைப்பு போன்று விலங்கு படைப்பு தாவர படைப்பு பூச்சிபுழு படைப்பு போன்ற எல்லா படைப்புகளும் சக படைப்புகள் என்று பார்க்க வேண்டும்.
ஒரு நாய் ஆண் நாய் ஆக இருந்தால் சக படைப்பு சகோதரன் என்றும் அந்த நாய் பெண்ணாக இருந்தால் சக படைப்பு சகோதரி என்றும் நோக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டிருக்கிறார். ஆனால் சவுதி அரேபிய ஆதரவு வட்டம் இப்படியான பரந்த விரிந்த கருத்தோடு இல்லை என்பது விசனத்துக்குரியது.
சக படைப்பை எல்லாம் பராமரித்துக் கொண்டு வாழ வேண்டிய மனிதன் முஸ்லிம்களுக்கு தாருங்கள் முஸ்லிம்களுக்கு பேரீத்தம் பழம் கொடுங்கள் என்று சொல்கிறார்கள்.
ஏன் இப்படியான குறுகிய சிந்தனை இருக்கிறது என்று அடிக்கடி அவர் கேட்பார்?
எமது நாட்டில் இருந்து வந்த பேரிச்சம்பழம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வந்த பழம் எல்லோருக்கும் கொடுக்கலாம் என்ற கருத்தை கொண்டிருக்கிறார் ஆனால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் நோன்புக்கு வந்த பழம் என்று சொல்கிறார்கள். நோன்பாளிக்கும் கொடுக்கலாம் சக மத சகோதரர்களுக்கும் கொடுக்கலாம்.
இந்தக் கருத்தை குறுகிய சிந்தனை படைத்த இலங்கை வாழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய இயக்கங்கள் உலமாக்கள் ஏற்றுக் கொள்ள தயார் இல்லை.
உலமாக்களுக்கும் தாயி என்று அழைக்கப்படக்கூடிய அவர்களுக்கும் இஸ்லாத்தின் பரந்த கருத்தை படிப்பிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்வதை விட உலமாக்களுக்கு இஸ்லாத்தை படிப்பிப்பது கடமை என்று நான் கருதுகிறேன்.
இந்தக் கரத்தில் எனது தூதுவரும் உடன் படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இப்படியான கருத்துக்களை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
இத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றை அங்கீகரித்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துங்கள் என்று அவர் சொல்வதனால் நான் முன்மொழியும் என் கருத்தை அவர் ஏற்றுக் கொள்வார் என்று கருதுகிறேன்.
அதேபோன்று இலங்கையில் வாழுகின்ற எல்லா இடங்களும் சகோதர இனம். எனவே சக மத சகோதரர்கள் என்று கருணைக் கண்ணோடு நோக்கி உலக வாழ்வின் அத்தியாவசிய தேவைகளை அதாவது உணவு, உடை, உறையுள் போன்ற விடயங்களில் ஏன் ஒரு சமூகம் மாத்திரம் அனுபவிக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்பார்?
இது அர்த்தமுள்ள இஸ்லாம் பற்றிய விசாலமான கருத்தை கொண்ட ஒருவரின் கேள்வி.
அப்படியாயின் அம்பாறை மாவட்டத்தில் கட்டப்பட்ட 500 வீடுகள் ஏன் இன விகிதாசாரம், சுனாமியில் பாதிக்கப்பட்ட விகிதாசாரம், முஸ்லிம்களுக்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திப்பது எவ்வளவு பிழையானது என்ற கருத்தை மனக்கண் கொண்டவராக இந்த விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதும் அங்குள்ள அரசியல்வாதிகள் இது முஸ்லிம்களுக்கு வந்த வீடுகள் என்று சொல்வதும் எவ்வளவு பிழையானது!? என்று அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
எனவே நபிகளாரை பற்றியும் இஸ்லாம் என்ன சொல்கிறது அகிலத்துக்கோர் அருட்கொடை என்றுதான் சொல்கிறது முஸ்லிம்களின் நபி என்று பிரச்சாரம் செய்வதை எங்களது தூதுவர் அடிக்கடி வியந்து நோக்குவார்?
தானும் தனது நாடும் மனிதாபிமானம் குறித்து கவனம் செலுத்துகிறார்கள் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்துவார்.
இத்தகைய பரந்த விரிந்த சிந்தனை இஸ்லாத்தை பல வருடங்கள் கற்ற உலமாக்களுக்கு இல்லை என்பது மாபெரும் கவலை.
சமூகத்தை சிறு சிறு கருத்து முரண்பாடுகளால் கூறு போடாமல் மாற்றுக் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி சமூக ஒற்றுமையை பேணுங்கள் என்று உரத்து சொல்கிறார்.
ஆனால் சவுதி நாட்டை நேசிக்கிறோம் என்று சொல்கின்ற சிலர் சில சுயலாபங்களுக்காக தூதரகத்தோடு உறவு வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கருத்துக்களை சவுதி அரேபியாவின் கருத்தாக பிழையாக பிரச்சாரம் செய்கிறார்கள் சிறிய சிறிய விடயங்களை கிளறி இது சவுதி அரேபிய நாட்டினுடைய சிந்தனை என்று பிழையாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
சிலர் சவுதி அரேபியா நாட்டின் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அந்த நாட்டில் கிடைக்கின்ற வருமானங்களால் தங்களுடைய ஜீவனோ பாய போராட்டத்தை தீர்த்துக் கொள்கிறார்கள் இவர்களும் இவர்களுடைய கருத்தை சவுதி அரேபியாவின் கருத்து என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
சவுதி அரேபியா நாடு அதன் தூதுவரும் பரந்த விரிந்த கருத்தை கொண்டு வாழ்கிறார் என்பதை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாதது தான் இப்பொழுது உள்ள மாபெரும் பிரச்சனை.
Add comment