✍️ எஸ். சினீஸ் கான்
இஸ்லாமிய உலகின் முக்கியமான ஆன்மீகச் கடமையான ஹஜ் யாத்திரைக்காக 2026 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வரும் பிரமாண்ட ஏற்பாடுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று கூடும் இந்த புனித நிகழ்வை பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும், ஆன்மிக நிறைவுடன் நடத்துவதற்கான முயற்சிகள் இம்முறை மேலும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மக்கா மற்றும் மதினா நகரங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மஸ்ஜித் அல் ஹரம் மற்றும் மஸ்ஜித் அல் நபவி ஆகிய புனித மஸ்ஜித்துக்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நவீன முறைகள், குளிரூட்டும் அமைப்புகள், குடிநீர் மற்றும் மருத்துவ சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதிவேக ரயில் சேவைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்து முறை, ஹாஜிகளின் பயணத்தை எளிமையாக்குகின்றன.
டிஜிட்டல் மாற்றம் இந்த ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளின் முக்கிய அம்சமாக திகழ்கிறது. பதிவு, விசா, தங்குமிடம், போக்குவரத்து, வழிகாட்டுதல் போன்ற அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்த இணையத்தளங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. சுகாதார பாதுகாப்பு, அவசர சிகிச்சை மையங்கள், மொபைல் மருத்துவ அணிகள் மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஹாஜிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் அரசின் முதன்மை குறிக்கோளாக அமைந்துள்ளது.
இந்த பிரமாண்டமான மற்றும் ஒழுங்குமுறைமிக்க ஏற்பாடுகள், இரு புனித மசூதிகளின் காவலரான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவூத் அவர்களின் அறிவார்ந்த தலைமையிலும், முகம்மட் பின் சல்மான் அவர்களின் முன்னோக்கிய பார்வையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. உலக முஸ்லிம்களின் ஆன்மிக நலனையும் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படும் இவர்களின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
யா அல்லாஹ்! இந்த 2026 ஹஜ் யாத்திரையை அனைத்து ஹாஜிகளுக்கும் எளிதாகவும், அமைதியாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஆக்குவாயாக. சவூதி அரேபியா இராச்சியத்தின் மன்னர் மற்றும் இளவரசருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் வெற்றியை வழங்கி, அவர்களின் புனித சேவைகளை நற்காரியமாக ஏற்றுக்கொள்ளுவாயாக. ஆமீன்.
Add comment