( எஸ். சினீஸ் கான்)
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, மக்கா மஸ்ஜிதுல் ஹராமிற்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி யாத்திரிகர்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக 5,200 சக்கர நாற்காலி (Wheelchair) பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரு புனிதத் தலங்களின் பராமரிப்புக்கான பொது ஆணையம் “தைபி” (Daifi – எனது விருந்தினர்) என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 12 நாட்கள் நடைபெற்ற 49 பயிற்சி அமர்வுகளில் 5,200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறன்களை மேம்படுத்திக் கொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் யாத்திரியகர்களின் அனுபவம் மேலும் இனிமையாகவும், பாதுகாப்பாகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Add comment