இலங்கையில் 1447ஆம் ஹிஜ்ரி ஆண்டுக்கான ‘இரு புனிதத் தலங்களின் காப்பாளரின்’ இஃப்தார் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வகையிலான விசேட இஃப்தார் தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.
சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வை, இந்தியாவிலுள்ள இரு புனிதத் தலங்களின் காப்பாளரின் தூதரகத்தின் மார்க்க விவகார இணைப்பாளரின் ஊடாக, இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில், மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் கௌரவ முனீர் முளஃபர், இஸ்லாமிய நிலையங்கள் மற்றும் சங்கங்களின் அதிகாரிகள், முக்கிய மார்க்க அறிஞர்கள் மற்றும் முன்னணி ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
Add comment