✍️ (அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் BA மதனி,பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,கொழும்பு)
என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி:
ஈரானின் ஏவுகணைகள் சவுதி அரேபியாவை தாக்கியபோதும், தன்னிடம் அனைத்து பேராற்றலும் யுத்தம் செய்வதற்கான திறன்களும் பலமும் இருந்தும், ஏன் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கவில்லை?
பதில்:சவுதி அரேபியா ஒரு சுயாட்சி கொண்ட வலிமையான நாடு. அது பிராந்தியத்திலும், அரபு உலகிலும், இஸ்லாமிய உலகிலும், சர்வதேச அளவிலும் பெரிய அரசியல் தாக்கத்தை உடையது. உலக நாடுகள் அதற்கு செவிமடுக்கின்றன. தேவையானபோது பல நாடுகள் அதனுடன் இணைந்து துணையாக நிற்கின்றன. மேலும், அல்லாஹ்வின் அருளால், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறனும், உடனடி பதிலடி கொடுக்கக்கூடிய முழுமையான சக்தியும் அதற்குள்ளது.
ஆனால், இந்த நிலைமையை சவுதி அரேபியா மிகுந்த ஞானத்துடனும் தூரநோக்குடனும் கையாள்கிறது.இது, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரதும் மன்னரதும், அவரது நம்பிக்கைக்குரிய இளவரசரதும் வழிநடத்தலின் கீழ் நடைபெறுகிறது.தமக்கு சம்பந்தமில்லாத ஒரு மோதலில் சிக்கிக் கொள்ளாமல், “தீயை ஏற்றியவன் அதனை அணைக்க வேண்டும்” என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.சவுதி அரேபியாவின் தலைமையின் அடையாளம் சமநிலையும் ஞானமும் ஆகும்.அவர்கள் கோஷங்களையும் தூண்டுதல்களையும் பின்தொடரவில்லை; உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. மாறாக அமைதியாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட்டு, நாட்டின் நலனையும் பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் முன்னிலைப்படுத்துகின்றனர்.
தேவையானபோது செயல்படுகிறார்கள்; தேவையானபோது அமைதியே வலிமையான பதிலாக இருக்கிறது.இந்த ஞானமிக்க தலைமையைக் கொண்டிருப்பது சவுதி அரேபியாவுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்.அவர்கள் இழப்புகளால் நிரம்பிய போரில் இழுக்கப்படாமல், புத்திசாலித்தனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.அவர்களின் பாதை விவேகமும், அவர்களின் அடையாளம் நிலைத்தன்மையும் ஆகும்.அனைவரும் அறிந்ததே சவுதி அரேபியா தனது சக்திவாய்ந்த ஏவுகணைகளால் எதிரிகளை அழிக்கவில்லை;அது தனது அரசியல், தாராள ஞானத்தின் மூலம் வெற்றி பெற்றது.இதுவே மகத்தான சவுதி அரேபியாவின் ஞானமும் தூரநோக்கும் கொண்ட தேசம்!அவர்கள் இராணுவமாக பதிலடி கொடுத்திருந்தால், விமர்சகர்கள் கூறியிருப்பார்கள்:“அவர்கள் பிராந்தியத்தை அழிவூட்டும் போருக்கு இழுத்து விட்டார்கள்” என்று.அவர்கள் தங்கள் பதிலடி உரிமையை மட்டும் வைத்திருந்தால்:“அவர்கள் பயந்து விட்டார்கள், பின்வாங்கி விட்டார்கள்” என்று கூறியிருப்பார்கள்.அவர்கள் போரில் இறங்கியிருந்தால்:“அவர்கள் ‘சியோனிசத்துடன் இணைந்து ‘முஸ்லிம் நாடாகிய’ ஈரானுக்கு எதிராக நின்றார்கள்” என்று குற்றம் சாட்டியிருப்பார்கள்.அவர்கள் பிராந்தியத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றினாலும்:
எதிரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்களை பலவீனமாக காட்ட முயன்றிருப்பார்கள்.எந்த நிலையிலும், சவுதி அரேபியாவின் ஞானமே வெற்றி பெறுகிறது.அது முஸ்லிம்களையும் உலகையும் போரால் ஏற்படுகின்ற குழப்பத்திலிருந்து பாதுகாக்கிறது.அவர்களின் சிறிய நடவடிக்கைகளுக்கே பெரிய நன்மையும் ஆழ்ந்த ஞானமும் உள்ளது.அல்லாஹ் சவுதி அரேபியாவையும், அதன் சிறந்த தலைவர்களையும், அதன் விசுவாசமான மக்களையும் காப்பானாக.அவர்களை அல்லாஹ்வுக்கு அடுத்ததாக இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும், உலகத்திற்கும் ஒரு அருளாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குவானாக.
Add comment