சவூதி மன்னரின் விசேட விருந்தினர்களாக உம்ரா யாத்திரை செல்லும் இலங்கைக் குழுவினர் இன்று பயணம்இரு புனிதத் தலங்களின் பாதுகாவலரும் சவூதி அரேபியாவின் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விசேட விருந்தினர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர், புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சவூதி மன்னரின் இந்த விசேட அழைப்பின் பேரில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுக்கு புனித உம்ரா யாத்திரைக்கான இந்த அரிய வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இக்குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியா நோக்கி பயணமாகினர்.
இவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து மற்றும் வழிபாட்டு ஏற்பாடுகள் அனைத்தும் சவூதி மன்னரின் விசேட வழிகாட்டலில், சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சின் ஊடாக உயர் மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
Add comment